Today's Promise
Do God's will and hear the voice of God !!!
1 John 2:17 "The world shall pass away, and the lust thereof: but he that does the will of God abides forever."
Beloved in Christ,
God wants us to live according to His will. If we are to live according to the will of God, we must first listen to the voice of God.
Early in the morning, the birds of the earth make their voice to God in thanksgiving. You and I are more special than birds because we are made in His image.
The voice of God needs to be heard in our lives to fulfill God's will in our lives. Early in the morning Moses listened to the divine direction and guided the Israelites. And from the day that the prophet Samuel was heard from the LORD, his name was proclaimed from Dan even to Beersheba. Early in the morning, in our lives, in our studies, and in our spiritual lives, we find God, according to Proverbs 8:17.
The sheep follow after him, for the sheep know the sound of a shepherd. The Lord Jesus Christ also knew the voice of God. Early in the morning, he left himself to do God's will.
We too are waiting in the early morning community to get the voice of God in our lives.
" God himself bless you, Amen".
(Translation in Tamil)
தேவ சித்தம் நிறைவேற, தேவ சத்தத்தை கேட்கவேண்டும் !!!
1 யோவான் 2:17
"உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்."
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
நாம் தேவசித்தத்தின்படி வாழவேண்டும்மென்று தேவன் விரும்புகிறார். நாம் தேவனுடைய சித்தத்தின்படி வாழவேண்டுமானால் முதலாவது நாம் தேவனுடைய சத்தத்தை சரியான முறையில் கேட்பவர்களாக இருக்க வேண்டும்.
பூமியில் தேவனால் படைக்கப்பட்ட பறவைகள் தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தங்களுடைய சத்தத்தை அதிகாலையில் தேவனுக்கு தெரியப்படுத்துகின்றன. நீங்களும் நானும் பறவைகளைக் காட்டிலும் விசேஷித்தவர்கள் காரணம் நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கின்றோம்.
தேவ சித்தம் நம் வாழ்க்கையில் நிறைவேற தேவனுடைய சத்தத்தை அனுதினமும் நம் வாழ்வில் கேட்கவேண்டும். அதிகாலையில் மோசே தேவசத்தத்தைக் கேட்டு இஸ்ரவேல் ஜனங்களை சரியாக வழிநடத்தினான். கர்த்தருடைய தீர்க்கதரிசி சாமுவேல் தேவசத்தம் கேட்ட நாள் முதற்கொண்டு தாண் முதல் பெயர்செபா வரை அவனுடைய பெயர் பிரஸ்தாபமாயிற்று. நம்முடைய வாழ்வில், படிப்பில், ஆவிக்குரிய வாழ்வில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நீதிமொழிகள் 8:17 -இன் படி தேவனை கண்டடைவோம்.
ஒரு மேய்ப்பனுடைய சத்தத்தை ஆடுகள் நன்றாய் அறிந்துதிருக்கிறபடியால் ஆடுகள் அவனுக்கு பின் செல்கின்றது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தேவனுடைய சத்தத்தை நன்றாய் அறிந்திருந்தார். அதிகாலையில் தேவ சித்தம் செய்வதற்கு தன்னை விட்டுக் கொடுத்தார்.
நாமும் தேவசித்தம், நம் வாழ்வில் நடக்க தேவ சத்தத்தை பெற்றுக் கொள்ள அதிகாலை தேவ சமூகத்தில் காத்திருப்போம்.
"தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்".
No comments:
Post a Comment